கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட வவ்வால் மாதிரிகளில் நிபா வைரஸ்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட வவ்வால் மாதிரிகளில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.;

Update:2024-08-05 02:52 IST

கோப்புப்படம் 

மலப்புரம்,

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜூலை 21-ந்தேதி நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பாண்டிக்காட்டில் இருந்து வவ்வால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் சேகரிக்கப்பட்ட வவ்வால் மாதிரிகளில் நிபா வைரஸ் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. பாண்டிக்காட்டில் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவில் 27 பழ வவ்வால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 6-ல் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு பட்டியலில் இருந்தவர்களுக்கு நிபா நெறிமுறையின்படி, சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. 472 பேர் இந்த தொடர்பு பட்டியலில் உள்ள நிலையில் அவர்களில் 261 பேர் 21 நாள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்