மத்தியபிரதேசத்தில் என்.ஐ.ஏ. நடவடிக்கை: ஐ.எஸ்.எஸ். தொடர்புடைய பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிப்பு - 3 பேர் கைது

மத்தியபிரதேசத்தில் ஐ.எஸ்.எஸ். தொடர்புடைய பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு 3 பேரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.

Update: 2023-05-27 23:57 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில் ஐ.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் மறைவிடம் தொடர்பான ரகசிய தகவல் தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) கிடைத்தது. அதையடுத்து, மத்தியபிரதேச போலீசின் பயங்கரவாத எதிர்ப்பு படையுடன் இணைந்து ஜபல்பூரில் 13 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஐ.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சையத் மமூர் அலி, முகமது அடில் கான், முகமது ஷாகித் என்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து, கூர்மையான ஆயுதங்கள், வெடிபொருட்கள், பல்வேறு ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவரும் போபாலில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

அவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் பயங்கரவாத கருத்துகளை பரப்பியுள்ளனர், அதன்மூலம் நாட்டில் வன்முறை தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர் என என்.ஐ.ஏ. செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்