நீட் விவகாரம்: முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது

நீட் தேர்வு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-07-11 14:33 GMT

புதுடெல்லி,

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ள விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியுள்ளது. பீகாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 16 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நீட் வினாத்தாள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நாலந்தாவைச் சேர்ந்த ராக்கி என்ற ராகேஷ் ரஞ்சனை, பீகார் மாநிலம் பாட்னாவில் சிபிஐ கைது செய்துள்ளது. ராக்கியின் ஐ.பி. முகவரி- மின்னஞ்சல் தரவுகளைக் கண்காணித்து அவர் பதுங்கி இருந்த இடத்தை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட ராக்கியை பாட்னாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 10 நாட்கள் சிபிஐ காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்