நீட் விவகாரம்: தவறு இருந்தால் ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுங்கள் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் அதனை ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

Update: 2024-06-18 10:03 GMT

புதுடெல்லி,

வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகள் காரணமாக, கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும், மறுதேர்வுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வை நடத்துவதில் 0.001 சதவீதம் அளவிற்கு தவறு நடந்திருந்தாலும் கூட அதனை ஒப்புக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து இந்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்