மடிகேரி அருகே காரில் கடத்திய ரூ.10 லட்சம் `ஆசிஸ் ஆயில்' பறிமுதல்; கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது

மடிகேரி அருகே காரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள `ஆசிஸ் ஆயில்' கடத்திய கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-09-02 15:48 GMT

குடகு;

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா பாகமண்டலா பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தல் நடப்பதாக பாகமண்டலா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் கரிகே சர்க்கிள் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் ஆசிஸ் ஆயில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த அகமது கபீர் (வயது 37), அப்துல் காதர் (27) மற்றும் முகமது முஜாமில் (22) ஆகியோர் என்பதும், அவர்கள் கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு ஆசிஸ் ஆயிலை விற்பனை செய்வதற்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் ஆசிஸ் ஆயிலை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்