வருகிற 15-ந் தேதி ஒரு லட்சம் பேர் பெங்களுருவில் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம்; டி.கே.சிவக்குமார் பேட்டி

பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ளும் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-08 21:14 GMT

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

75-வது சுதந்திர தினத்தையொட்டி கர்நாடக காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. நான் பெங்களூருவில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. இல்லாத தொகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து இந்த நடைபயணம் குறித்து கலந்துரையாடி வருகிறேன். மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். வார்டு மறுவரையறை தொடர்பாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்சபேனைகள் வந்தன. அந்த ஆட்சேபனைகளை அரசு கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை. பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி ஒரு லட்சம் பேர் தேசிய கொடியை கையில் ஏந்தி ஊர்வலம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஜனநாயகம் இருந்திருக்காவிட்டால் குமாரசாமி, எடியூரப்பா போன்றோர் முதல்-மந்திரி பதவிக்கு வந்திருக்க முடியாது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்