மே.வங்காளத்தில் மம்தா அரசை கண்டித்து பாஜக பேரணி; போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு

மேற்கு வங்காளத்தில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜக அறிவித்தது.

Update: 2022-09-13 12:14 GMT

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசில் ஊழல் மலிந்து விட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்துதலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெறும் என்று பாஜக அறிவித்து இருந்தது.

இதன்படி, போராட்டத்தில் பங்கேற்க மாநிலத்தின் பல இடங்களில் இருந்து பாஜகவினர் குவியத்தொடங்கினர். பல இடங்களில் ரயில் நிலையங்களில் வைத்தே பாஜகவினர் தடுக்கப்பட்டதாக அக்கட்சி போலீசார் மீது குற்றம் சாட்டினர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். தலைமைசெயலகம் பகுதியை நெருங்கியதும் போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ஹவ்ரா பகுதியில் பாஜகவினர் பேரணியாக வந்த போது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை மீறி பாஜகவினர் முன்னேறினர். கூட்டத்தினரை கலைப்பதற்காக, பேரணியாக வந்தவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அங்கு ஏற்பட்ட வன்முறையில் காவல் துறை வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்