பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் குத்திக்கொலை - டெல்லி வணிக வளாகத்தில் நடந்த பயங்கரம்

ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-23 05:37 GMT

புதுடெல்லி:

டெல்லி புத்த விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஜதின் (வயது 23). தனியார் வங்கியில் வேலை செய்து வந்த இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பர்களுடன் பிதாம்புரா பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்று அங்குள்ள ஓட்டலில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது ஓட்டல் ஊழியர்களுக்கும் அவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஓட்டல் ஊழியர்கள் ஜதினை தாக்கியதுடன் கத்தியால் குத்தி உள்ளனர். தாக்குதலை தடுத்து ஜதினை பாதுகாக்க முயன்ற அவரது நண்பர்களுக்கும் கத்திக்குத்து விழுந்தது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜதின், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்கின்றனர். விசாரணைக்கு பிறகு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.

Tags:    

மேலும் செய்திகள்