குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத்துக்கு செப்டம்பர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பத்ரா சால் மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தை கடந்த 1-ந் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர்.

Update: 2022-08-22 06:23 GMT

மும்பை,

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரவின் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தியது. விசாரணையில் அவர் மோசடியில் கிடைத்த பணத்தின் ஒருபகுதியை சஞ்சய் ராவத், குடும்பத்தினருக்கு கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து பத்ரா சால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத்தை கடந்த 1-ந் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். தற்போது அவர் அமலாக்கத்துறை காவலில் உள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சிறப்பு கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடந்தது.

அதனை தொடர்ந்து, சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.அதே வேளையில் அவருக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் அளிக்கப்படலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்