பண மோசடி வழக்கு: ஹர்திக் பாண்ட்யாவின் உறவினர் கைது

ரூ.4.3 கோடி பண மோசடி வழக்கில் ஹர்திக் பாண்ட்யாவின் உறவினரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2024-04-11 07:28 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அவரது மற்றொரு சகோதரரான க்ருணால் பாண்ட்யா, லக்னோ அணியில் விளையாடி வருகிறார். இவர்கள் இருவரும் தனது உறவினரான வைபவ் என்பருடன் இணைந்து நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த நிறுவனத்தில் பாண்ட்யா சகோதரர்கள் தலா 40 சதவீதம் முதலீடு செய்துள்ளனர். வைபவ் 20 சதவீதம் முதலீடு செய்து, நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டார். இதற்கிடையே, நிறுவனத்தின் லாபத்தை கொண்டு வைபவ் புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். அத்துடன், நிறுவனத்தில் தனது லாப விகிதமான 20 சதவீதத்தை 33 சதவீதமாக அதிகரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அறிந்த ஹர்திக் பாண்டா, வைபவிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, வைபவ் தன்னிடம் பண மோசடி செய்ததாக ஹர்திக் பாண்ட்யா போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வைபவை ரூ.4.3 கோடி பண மோசடி வழக்கில் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்