மும்பை: அடுக்குமாடி குடியிருப்பை தாக்கிய மின்னல் - பதறவைக்கும் காட்சிகள்
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு மீது அதிக வெளிச்சத்துடன் மின்னல் தாக்கியது.
மும்பை,
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு மீது மின்னல் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. போரிவலி பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
அப்போது அடுக்குமாடி கட்டடத்தில் மின்னல் விழுந்தது. மிகவும் சத்தத்துடன் வெளிச்சமாக அந்த மின்னல் தாக்கியது. இதனை மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீடியோ எடுத்துள்ளனர். மின்னல் தாக்கும் போது அவர்கள் அதிர்ச்சியில் உரைந்து போயினர்.