திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விரக்தி; எலி மருந்து சாப்பிட்டு 35 வயது ஆண் தற்கொலை

திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாத விரக்தியில் 35 வயது ஆண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-20 23:24 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை மாவட்டம் குல்ரா நகரம் குரேஷி நகர் பகுதியை சேர்ந்தவர் மஸ்ஹர் அலி அன்சாரி (வயது 35). இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் அன்சாரிக்கு இதுவரை குழந்தை இல்லை. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், குழந்தை இல்லாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அன்சாரி திங்கட்கிழமை இரவு வீட்டில் எலி மருந்து சாப்பிட்டுள்ளார். எலி மருந்து சாப்பிட்ட அன்சாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அன்சாரி புதன்கிழமை உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்