மாடல் அழகிகளை பாலியல் தொழிலில் தள்ளிய நடிகை...!

மாடல் அழகிகளை பாலியல் தொழிலில் தள்ளிய நடிகையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-21 19:49 GMT

மும்பை,

பிரபல போஜ்புரி நடிகை சுமன் குமாரி (வயது 24). மும்பையில் வசித்து வரும் இவர் போஜ்புரியில் படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்தி, பஞ்சாபி மொழிகளிலும் ஆவணப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், மாடல் அழகிகளை பாலியல் தொழிலில் தள்ளியதாக நடிகை சுமன் குமாரியை மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் மும்பையில் வசித்து வரும் சுமன் குமாரி மாடல் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து நடிகை சுமன் குமாரியை கைது செய்த போலீசார் அவர் பிடியில் இருந்த மாடல் அழகிகள் 3 பேரை மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்