மும்பை: ஐஐடி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர் சஸ்பெண்ட்

ஐஐடி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மும்பை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2023-01-02 07:38 IST

மும்பை,

நவி மும்பையில் ஐஐடி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யாததால் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீதும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருவர் மீதும் நவி மும்பை போலீஸ் கமிஷனர் மிலிந்த் பரம்பே நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் நவி மும்பையின் சன்பாடா பகுதியில் உள்ள பாம் பீச் சாலையில், பாம்பே இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பயின்றுவரும் (ஐஐடி) 19 வயது மாணவி ஒரு போலீஸ் காவலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது வகுப்பு தோழனுடன் அந்த பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, காவலர் இந்த குற்றச்செயலை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளிக்க சன்படா காவல் நிலையத்திற்கு சென்றார்.

ஆனால் அந்த நேரத்தில் பணியாளராக இருந்த ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்யவில்லை. பின்னர், பாதிக்கப்பட்ட பெண் பவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்