காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் மும்பை காங். தலைவர் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் மும்பை காங். தலைவர் சந்தித்து பேசினர்.

Update: 2022-10-21 19:29 GMT

மும்பை,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் மல்லிகாஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் டெல்லி சென்ற மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப் மற்றும் சரண் சிங் சப்ரா ஆகியோர் அவரை சந்தித்து பேசினர். அப்போது புதிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் மராட்டிய உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மும்பை மாநகராட்சியில் நிலவும் அரசியில் சூழ்நிலை குறித்து மல்லிகார்ஜூன கார்கே அவர்களிடம் கேட்டறிந்தார்.

இதேபோல மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை மும்பை நகருக்கு வருமாறு கேட்டுக்கொண்டதாகவும், இந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்