சாலையோர கடையில் டீ போட்ட எம்.பி. மஹுவா மொய்த்ரா... 'எங்கே கூட்டிச் செல்லுமோ' என ட்வீட்

சாலையோர கடையில் டீ தயாரிக்கும் வீடியோ ஒன்றை மஹுவா மொய்த்ரா எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.;

Update:2023-01-12 21:51 IST

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியின் எம்.பி.யாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா பதவி வகித்து வருகிறார். இவர் சாலையோர கடையில் நின்று டீ தயாரிக்கும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


மேலும் அந்த பதிவில், "சாலையோர கடையில் டீ தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். இது என்னை எங்கே கூட்டிச் செல்லும் என்பதை யார் அறிவார்" என்ற வாசகத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பதாக பலர் பின்னூட்டத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்