காங்கிரசை அழிவில் இருந்து காப்பாற்ற பாதயாத்திரை - மத்திய மந்திரி தோமர் கருத்து

காங்கிரசை அழிவில் இருந்து காப்பாற்றவே பாதயாத்திரை மேற்கொள்ளப்படுவதாக மத்திய மந்திரி தோமர் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-22 23:15 GMT

கோப்புப்படம்

குவாலியர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை, இன்று (புதன்கிழமை) மத்தியபிரதேசத்துக்குள் நுழைகிறது.

இந்தநிலையில், மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியடைந்து வருகிறது. இனிவரும் நாட்களில் இன்னும் பலவீனம் அடையும். காங்கிரசை அழிவில் இருந்து காப்பாற்றவே பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், பாதயாத்திரைக்கு மக்களிடையே ஆதரவு இல்லை. எனவே, பாதயாத்திரையை கண்டு நாங்கள் பயப்பட தேவையில்லை. பா.ஜனதா புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்