காஷ்மீர் பனிமலையில் தவித்த அங்கேரி மலையேற்ற வீரர் விமானப்படையால் மீட்பு

இந்திய விமானப் படை மற்றும் ராணுவத்தின் 30 மணி நேர தேடுதலுக்குப் பின் அகோஸ் வெர்மஸ் மீட்கப்பட்டார்.

Update: 2022-08-28 00:33 GMT

ஜம்மு,

அங்கேரியின் புடாபெஸ்ட் நகரத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் அகோஸ் வெர்மஸ் (வயது 38). இவர் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சும்சம் பள்ளத்தாக்கில் பனிமூடிய உமாசிலா மலைப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அவர் காணாமல் போய்விட்டார். 5 நாட்கள் கழிந்தநிலையில், இந்திய விமானப் படை மற்றும் ராணுவத்தின் 30 மணி நேர தேடுதலுக்குப் பின் அகோஸ் வெர்மஸ் மீட்கப்பட்டார்.'மலை ஏற்றத்தின்போது வழிதவறிய அவர், 5 நாட்கள் கடுங்குளிரில் அவதிப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது' என்று ராணுவத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்