பண மோசடி வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

பண மோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

Update: 2023-07-31 18:53 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லி அருகே குருகிராமில், கட்டுப்படியாகும் வீட்டுவசதி திட்டம் என்ற பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.360 கோடி மோசடி செய்யப்பட்டது. அரியானா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. தரம்சிங் சோக்கருக்கு சொந்தமான நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக தரம்சிங், அவரது 2 மகன்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அதில் 4 ஆடம்பர கார்கள், ரூ.14½ லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.4½ லட்சம் ரொக்கத்தொகை கைப்பற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்