கார்,பைக்கில் கட்டுக்கட்டாக பணம் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

தெலுங்கானாவில் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update:2022-10-24 08:28 IST

கோப்புப்படம் 

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் நர்சிங்கி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சந்தேகப்படும் விதமாக வந்த இரு கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது அதில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது. கார்களில் இருந்த 35 லட்சம் ரூபாயும், இருசக்கர வாகனத்தில் இருந்த 30 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக, தேவல் ராஜூ, தாசர் லூதர், நாகேஷ், விஜய் குமார், ஸ்ரீகாந்த் சாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பணம் கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்