இந்தியாவின் மகள்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - அசாருதீன் ஒவைசி

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.

Update: 2024-04-29 13:43 GMT

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் புகார் குறித்து விசாரிக்க எஸ்.ஐ.டி. குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவுக்காக கர்நாடகாவில் வாக்கு சேகரித்த பிரதமர் மோடி, இந்திய மகள்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாருதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் தெரிவித்து இருப்பதாவது"

பிரஜ்வல் ரேவண்ணாவின் பின்னணியை பாஜக அறிந்திருந்தது. இருப்பினும், பிரதமர் மோடி ஏன் அவருக்கு ஆதரவளித்தார். ரேவண்ணா இப்போது இந்தியாவை விட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. பிரஜ்வால் ரேவண்ணாவுக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இந்திய மகள்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்