மிசோரத்தில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? - வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மிசோரம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

Update: 2023-12-04 02:54 GMT

அய்ஸ்வால்,

40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டசபைக்கு கடந்த மாதம் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 21 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி செய்கிறது. அம்மாநில முதல் மந்திரியாக ஜொராம்தங்கா செயல்பட்டு வருகிறார். அதேவேளை, சோரம் மக்களின் இயக்கம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை முக்கிய எதிர்க்கட்சிகளாக திகழ்கின்றன.

இந்நிலையில், மிசோரம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

மிசோரத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது சோரம் மக்களின் இயக்கம் வெற்றிபெற்று ஆட்சியமைக்குமா? அல்லது பாஜக அல்லது காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைக்குமா? என்பது இன்று தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்