உ.பி.: இரு வாரங்களாக காணாமல் போன பெண் ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு !

உத்தரப்பிரதேசத்தில் இரு வாரங்களாக காணாமல் போன பெண் ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Update: 2022-07-24 11:24 GMT

image credit: ndtv.com

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் பரதாப்கரில் கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கன்ஷிராம் காலனியில் வசிக்கும் 22 வயது திருமணமான பெண் ஜூலை 12 அன்று காணாமல் போனார். இதையடுத்து இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் போலீசார் காணாமல் போன பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில், காணாமல் போன பெண் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடு அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் ஒருசிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீசார், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்