மந்திரி அஸ்வத் நாராயணை உடனே பதவி நீக்க வேண்டும்

கொலை செய்ய வேண்டும் என்று கூறிய விவகாரத்தில் உயர்கல்வி மந்திரி அஸ்வத் நாராயணை பதவி நீக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-02-17 06:45 GMT

பெங்களூரு, 

முடிக்க வேண்டும்

திப்பு சுல்தான் போல் சித்தராமையா கொல்ல வேண்டும் என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-உயா்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், திப்பு சுல்தானை போல் என்னை கொலை செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் எதக்றாக மக்களை தூண்டிவிடுகிறார். அவரே துப்பாக்கி எடுத்து வரட்டும். மந்திரி அஸ்வத் நாரயாண், என்னை முடிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இதை கேட்டு நான் ஆச்சரியப்படவில்லை. மகாத்மா காந்தியை கொன்றவரை ஆராதிக்கும் கட்சியினரிடம் இருந்து அன்பு, தோழமையை எப்படி எதிர்பார்க்க முடியும்?.என்னை கொலை செய்யுமாறு பகிரங்கமாக அவர் பேசியுள்ளார். ஆனால் அவர் மீது இந்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் துறை மந்திரி அரக ஞானேந்திரா ஆகியோர் நடவடிக்கை எடுக்காமல் அஸ்வத் நாராயணுடன் ஒப்பந்தம் போட்டு கொண்டுள்ளனர். குஜராத் கலாசாரம் கர்நாடகத்திலும் புகுந்து விட்டதா?. பிரதமர் மோடி கடந்த 2002-ம் ஆண்டு மவுனமாக இருந்தது போல் இப்போதும் மவுனமாக இருப்பாரா?
.நீக்க வேண்டும்

கன்னடர்கள் ஒருபோதும் கர்நாடகத்தை குஜராத்தை போல் ஆக விட மாட்டார்கள். மந்திரிசபையில் இருந்து அஸ்வத் நாராயணை உடனடியாக நீக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அஸ்வத் நாராயணுடன் பா.ஜனதா கூட்டு சேர்ந்து செயல்படுகிறது என்று அர்த்தம். அல்லது அவர் நிலையற்ற மனநிலை கொண்டவராக அக்கட்சி கருதும். எனக்கு எதிரான கருத்தால் கன்னடர்கள் கோபம் அடைந்துள்ளனர் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்