கர்நாடகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு?

கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

Update: 2023-07-17 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் நந்தினி என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாதாரண பால் (நீல நிற பாக்கெட்) லிட்டர் ரூ.39, சிறப்பு பால் (ஆரஞ்சு பாக்கெட்) ரூ.42, கொழுப்பு நீக்கப்பட்ட பால் (கிரீன் பாக்கெட்) ரூ.48-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக பால் விலையை கூட்டமைப்பு பால் லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் என்று கர்நாடக அரசை வலியுறுத்தி வருகின்றன. மேலும் இதுபற்றி கர்நாடக அரசுக்கு பால் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த கர்நாடக அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 21-ந்தேதியுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. அதன்பிறகு கர்நாடக அரசு பால் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்