உத்தரகாண்டில் நள்ளிரவில் மேகவெடிப்பு; பெண் பலி: அழிந்து போன 30 வீடுகள்

உத்தரகாண்டில் நள்ளிரவில் ஆற்றில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி பெண் உயிரிழந்து உள்ளார். 30 வீடுகள் அழிந்து போய் விட்டன.;

Update:2022-09-10 14:40 IST



பித்தோராகார்,



இந்தியா மற்றும் நேபாள நாடுகளுக்கு மிக அருகே லஸ்கோ ஆறு பாய்கிறது. இந்த நிலையில், ஆற்றில் நேற்றிரவு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. இதில், 30 வீடுகள் அழிந்து போய் விட்டன. பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என மாவட்ட மாஜிஸ்திரேட் ஆஷிஷ் சவுகான் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, தர்ச்சுலா பகுதியில் காளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், தர்ச்சுலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. சில வீடுகள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளன.

இன்று காலை ஆற்றில் ஏற்பட்ட வலிமையான நீரோட்டத்தின் விளைவால் கட்டிடம் ஒன்று இடிந்து, நீரில் மூழ்கி போய் விட்டது என அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

காளி ஆற்றில் ஏற்படும் வெள்ள பெருக்கால் இந்தியா மற்றும் நேபாள நாடுகளில் உள்ள பல கிராமங்கள் பாதிப்படைகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்