மெஸ்காம் அதிகாரியின் கள்ளக்காதலி கைது

மெஸ்காம் அதிகாரியின் மனைவி கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-11-25 18:45 GMT

சிவமொக்கா:-

மெஸ்காம் அதிகாரி மனைவி

சிவமொக்கா டவுன் பிரியங்கா லே-அவுட்டை சேர்ந்தவர் தினேஷ். சிவமொக்கா மெஸ்காம் அலுவலகத்தில் தலைமை என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு தினேசுக்கு தலைமை துணை மின்பொறியாளர் பொறுப்பு கிடைத்தது.

இந்த நிலையில் தினேசுக்கும் அவருடன் பணியாற்றி வரும் காயத்ரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதுபற்றி அறிந்ததும் மஞ்சுளா, தினேசையும், காயத்ரியையும் கண்டித்துள்ளார்.

கத்தியால் குத்தி கொலை

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தூங்கி கொண்டிருந்த மனைவி மஞ்சுளாவை தினேஷ் கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து துங்காநகர் போலீசார் திேனசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கள்ளக்காதலி காயத்ரியின் தூண்டுதலின்பேரில் தான் மஞ்சுளாைவ தினேஷ் கொலை செய்தது தெரியவந்தது.

இதைடுத்து போலீசார், காயத்ரியை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மஞ்சுளாவை கொலை செய்ய கூறியதை காயத்ரி ஒப்புக் கொண்டார். இதையடுத்து காயத்ரியையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்