மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை
உப்பள்ளியில் மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
உப்பள்ளி:
உப்பள்ளி தாலுகா நூல்வி கிராமத்தை சேர்ந்தவர் ஈரய்யா மட்டபதி (வயது 40). கூலி தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நூல்வி கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்த ஈரய்யா, அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.