நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன் - மெகபூபா முப்தி

மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.;

Update:2022-08-21 17:06 IST

ஶ்ரீநகர்,

சமீபத்தில் ஷோபியானில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட காஷ்மீரி பண்டிட் சுனில் குமார் பட் குடும்பத்தினரை சந்திப்பதை தடுக்கவே தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

குப்கர் பகுதியில் உள்ள தனது வீட்டின் பூட்டிய கதவுகள் மற்றும் வெளியே நிறுத்தப்பட்டுள்ள சிஆர்பிஎப் வாகனத்தின் படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மெகபூபா முப்தி, "காஷ்மீரி பண்டிட்டுகளின் அவல நிலையை மூடி மறைக்க இந்திய அரசாங்கம் விரும்புகிறது. ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக அவர்களின் மோசமான கொள்கைகள் தப்பிச் செல்ல விரும்பாதவர்களை இலக்கு வைத்து கொலை செய்ய வழிவகுத்தது.

எங்களை பிரதான எதிரியாக முன்னிறுத்துவதற்காகத்தான் நான் இன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். இன்று சோதிகாமில் உள்ள சுனைல் குமாரின் குடும்பத்தைப் பார்க்க நான் எடுத்த முயற்சி நிர்வாகத்தால் முறியடிக்கப்பட்டது. பள்ளத்தாக்கின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் பார்வையிடும் அதே நிர்வாகம் தான் எங்களைப் பூட்டி வைப்பது எங்களுடைய பாதுகாப்பிற்காக என்று கூறுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்