மனிதநேய அடிப்படையில் மருத்துவ சேவைகள் இருக்க வேண்டும்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேச்சு

மனிதநேய அடிப்படையில் மருத்துவ சேவைகள் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-12 14:43 GMT

கோலார் தங்கவயல்;

மந்திரி சுதாகர்



சிக்பள்ளாப்பூர் தாலுகா முத்தேனஹள்ளியில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் மாணவிகளின் மருத்துவ சேவை குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில சுகாதாரத்துறை மந்திரியும், சிக்பள்ளாப்பூர் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சுதாகர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

மருத்துவ சேவைகள் சாதி, மொழி, மத அடிப்படையில் செயல்படக்கூடாது. மனிதநேய அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். அப்போது தான் சமுதாயத்தில் நல்ல டாக்டர்களையும், நர்சுகளையும் உருவாக்க முடியும்.

சமூக வளர்ச்சி...

மருத்துவம் மற்றும் நர்சிங் கல்லூரி நிறுவனங்கள் எப்போது சமூக மேம்பாட்டுக்காக மாணவ-மாணவிகளை உருவாக்குவதில் அக்கறை கொள்ளவேண்டும். பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்ககூடாது.

டாக்டர்கள் மற்றும் நர்சுகள் என்பவர்கள் மனித மேம்பாட்டுக்காகவே சேவை செய்யவேண்டியவர்கள். அவர்களுக்கு ஆரம்ப காலம் முதலே சமூக வளர்ச்சி குறித்த அக்கறையை கூறி வளர்க்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்