உத்தரபிரதேசத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு - மாயாவதி வலியுறுத்தல்

உத்தரபிரதேசத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-10-03 20:50 GMT

கோப்புப்படம்

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பீகார் அரசு நடத்திய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தகவல்கள் இன்று செய்திகளில் வெளியாகி, அதுகுறித்து தீவிர விவாதங்கள் நடந்து வருகின்றன. சில கட்சிகள் நிச்சயமாக இதில் சங்கடமாக இருக்கின்றன. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி இதை ஆதரிக்கிறது. ஏனெனில் இதர பிற்படுத்தப்பட்டோரின் அரசியலமைப்பு உரிமைகளுக்கான நீண்ட போராட்டத்தின் முதல் படியாக இதை நாங்கள் பார்க்கிறோம். உத்தரபிரதேச அரசு, பொதுமக்களின் உணர்வுக்கு ஏற்ப, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும். அதே வேளையில் மத்திய அரசு தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அவர்களுக்கு உரிய உரிமைகளை வழங்கினால்தான் சரியான தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்