சந்திரபாபு நாயுடு கைது: ஏற்கத்தக்கதல்ல - மம்தா பானர்ஜி கண்டனம்

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-11 16:10 GMT

கொல்கத்தா,

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி,

"சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை நான் ஏற்கவில்லை. அவர் தவறு இழைத்திருந்தால், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மாறாக, அவரை கைது செய்வது ஏற்கத்தக்கதல்ல. எவர் ஒருவரையும் யாரும் பழிவாங்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்