2023-ம் ஆண்டு நம் வாழ்வில் புதிய சாதனைகளைக் கொண்டு வரட்டும் - ஜனாதிபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-01 04:04 GMT

புதுடெல்லி,

சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு 2023 கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! சக குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கங்களும் நல்வாழ்த்துக்களும். 2023-ம் ஆண்டு நம் வாழ்வில் புதிய உத்வேகங்கள், இலக்குகள் மற்றும் சாதனைகளைக் கொண்டுவரட்டும்.

தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிக்க உறுதி ஏற்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்