விஜயகாந்த் படத்துக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

விஜயகாந்த் படத்துக்கு தடை கேட்ட வழக்கினை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-04-08 19:07 GMT

கோப்புப்படம்

சென்னை.

நடிகர் விஜயகாந்த், லயா, புளோரா, சரத்பாபு உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் 'கஜேந்திரா'. இந்த திரைப்படத்தை எவர்கிரீன் மூவி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஏ.துரை தயாரித்து, கடந்த 2004-ம் ஆண்டு வெளியிட்டார். இந்த திரைப்படத்தை வெளியிட தடை கேட்டு ஜெஸ்வந்த் சந்த் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், தயாரிப்பாளர் துரை தன்னிடம் வாங்கிய தொகை ரூ.2.50 கோடியை வட்டியுடன் திருப்பித் தரும்வரை இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த 2004-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்துவந்தது. கடந்த மாதம் இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் தனக்கு வரவில்லை என்று அவரது வக்கீல் எம்.சத்தியா கூறினார். அதை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார். கடந்த வாரம் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அதே பதிலையே வக்கீல் கூறினார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்