மைசூரு குப்பண்ணா பூங்காவில் மா, பலாப்பழ கண்காட்சி-ஹரீஷ்கவுடா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மைசூரு குப்பண்ணா பூங்காவில் மாம்பழ, பலாப்பழ கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை ஹரீஷ்கவுடா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-26 21:31 GMT

மைசூரு:-

மாம்பழ கண்காட்சி

மைசூரு டவுனில் உள்ள குப்பண்ணா பூங்காவில் ஆண்டுதோறும் மாம்பழ, பலாப்பழ சீசனையொட்டி மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் குப்பண்ணா பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் நேற்று மாம்பழ கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது. இந்த கண்காட்சியை கலெக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் சாமராஜா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரீஷ்கவுடா தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்க உள்ளது.

தரமான மாம்பழங்கள்

இதையடுத்து ஹரீஷ்கவுடா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், பழங்களுக்கெல்லாம் ராஜா மாம்பழம் தான். இது ஆண்டில் 3 மாதங்கள் தான் விளைய கூடியது. இந்த மாம்பழ சீசனில் இந்த கண்காட்சி மற்றும் விற்பனை நடத்த வேண்டியது அவசியம். இந்த கண்காட்சி மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த மாம்பழங்களை விற்பனை செய்வதால் அவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். மேலும் இங்கு மக்கள் குறைந்த விலையில் ருசியான, தரமான மாம்பழங்களை வாங்கி பயனடையலாம்.

இங்கு அல்போன்சா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் உள்ளன. இந்த மாம்பழங்கள் இயற்கையான முறையில் பழக்க வைக்கப்பட்டவை ஆகும். இந்த கண்காட்சியை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்