பாராளுமன்றம் அருகே பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

பாராளுமன்ற கட்டிடம் அருகே இன்று ஒருவர் பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2023-04-06 19:00 IST

புதுடெல்லி,

பாராளுமன்ற கட்டிடம் அருகே இன்று ஒருவர் பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோகினியில் வசிக்கும் ராஜ் குமார் சர்மா என்ற நபர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பியவாறு பாராளுமன்ற கட்டிடம் அருகே தீக்குளிக்க முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன், அவர் "தேஷ் கோ பச்சா லோ" (நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்று கத்தினார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்