மராட்டியத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 40 ஆண்டுகள் சிறைதண்டனை விதிப்பு
மராட்டிய மாநிலம் கோண்டியாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோண்டியா,
மராட்டியத்தில் முகேஷ் ஷெண்டே (28) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு நான்கரை வயது சிறுமியை சலேகாசா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக முகேஷ் ஷெண்டேவுக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மராட்டியத்தில் உள்ள கோண்டியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.