மீன் தொட்டியில் முதலை குட்டி வளர்த்த நபர் கைது...!

மீன் தொட்டியில் முதலை குட்டி வளர்த்த நபரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2023-07-21 19:08 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் ரபெலி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முதலை குட்டி வளர்க்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து அந்த வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த வீட்டில் உள்ள ஒரு மீன் தொட்டியில் முதலை குட்டி ஒன்றை வளர்க்கப்பட்டுள்ளது. இதை கண்ட அதிகாரிகள் முதலை குட்டியை மீட்டனர்.

முதலை குட்டியை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோதமானது என்பதால் அதை வளர்த்த நபரையும் வனத்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன் கடற்கரைக்கு மீன் பிடிக்க சென்றபோது முதலை குட்டி பிடிபட்டதாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்