வங்கி ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர் - அதிர்ச்சி சம்பவம்

வங்கியில் டிரைவராக பணியாற்றும் நபர் அங்கு வேலை செய்துவரும் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2024-09-15 19:22 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் நவி மும்பையில் உள்ள தனியார் வங்கியில் டிரைவராக பணியாற்றி வரும் நபர் அதேவங்கியில் பணியாற்றி வரும் பெண் ஊழியருடன் பழகியுள்ளார்.

இந்த பழக்கத்தை சாதகமாக பயன்படுத்தி 41 வயதான அப்பெண்ணை டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், பாலியல் வன்கொடுமை நிகழ்வை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கி ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்