ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு: 53 தேர்வர்களுக்கு நோட்டீசு
ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு விவகாரத்தில் 53 தேர்வர்களுக்கு நோட்டீசு அனுப்பபட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் 15 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது நுழைவு தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. 1.16 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் 52,342 பேர் தேர்ச்சி பெற்றனர். இதற்கிடையே தேர்வு விடைத்தாள்களை (ஓ.எம்.ஆர்.) பரிசோதித்தபோது, அதில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து தேர்வு முடிவுகளை தற்காலிகமாக நிறுத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட 52 பேர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 52 தேர்வர்கள் மற்றும் தேர்வு எழுதிய மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக 52 தேர்வர்களுக்கும் தேர்வாணையம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. முறைகேடு நடைபெற்றது உறுதியாகும் பட்சத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.