அக்டோபர் 26 ஆம் தேதி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கிறார் மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே வரும் 26 ஆம் தேதி காங்கிரஸ் கட்சயின் தலைவரராக பொறுப்பேபேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-20 10:53 GMT

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.

இந்தநிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே வரும் 26 ஆம் தேதி காங்கிரஸ் கட்சயின் தலைவரராக பொறுப்பேபேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் மல்லிகார்ஜுன கார்கே தலைவராக பொறுப்பேற்கிறார்.

எம்.பி,க்கள்,, முன்னாள் முதல்-மந்திரிகள் ,முன்னாள் மாநில தலைவர்கள் மற்றும் பிற காங்கிரஸ் கட்சியின் அலுவலக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்