ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்: எதிர்க்கட்சி தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தினார்.

Update: 2022-06-10 19:05 GMT

Image Courtacy: PTI

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்த ஏற்பாடு செய்து வருகிறது.

இதனையடுத்து கட்சித்தலைவர் சோனியாகாந்தி ஆலோசனையின்பேரில் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து பேசினார்.

இதற்கிடையே மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவருமான மம்தாபானர்ஜியுடன் இதுகுறித்து கார்கே நேற்று ஆலோசித்தார். இதுதவிர தி.மு.க. மற்றும் ஆம் ஆத்மி, இடதுசாரிகள், சிவசேனா கட்சியினருடனும் அவர் ஆதரவு கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்