இந்தியா வந்துள்ள மாலத்தீவு பாதுகாப்புத்துறை தளபதிக்கு டெல்லியில் ராணுவ மரியாதை!
இருதரப்பு உறவு மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்த இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
புதுடெல்லி,
மாலத்தீவு நாட்டு பாதுகாப்புத் துறை தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்லா சாமான், தலைநகர் டெல்லிக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார்.
இந்தியா மாலத்தீவு இடையே இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்த அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவருக்கு இன்று டெல்லியில் ராணுவத்தின் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
மாலத்தீவில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கும் இந்தியா உதவி வருகிறது. இந்தியாவில் இருந்து 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை மாலத்தீவு உள்கட்ட அமைப்புகளை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது.
1988 முதல் பாதுகாப்பு மற்றும் ராணுவம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன. மாலத்தீவுக்கு தேவையான ராணுவ பயிற்சி மற்றும் உபகரணங்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.