அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு மத்திய அரசின் ஒய் - பிளஸ் பிரிவு பாதுகாப்பு

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு மத்திய அரசின் ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-26 16:22 GMT

மும்பை,

சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆளும் கூட்டணி, கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். இந்தநிலையில் மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களை சிவசேனா தொண்டர் அடித்து நொறுக்கினர். இதையடுத்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு சட்டவிரோதமாக திரும்ப பெற்றுவிட்டதாக ஏக்நாத் ஷிண்டே குற்றம்சாட்டினார். எனினும் இந்த குற்றச்சாட்டை மாநில உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் மறுத்தார்.

இந்தநிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் போர்னரே, மங்கேஷ் குடல்கர், சஞ்சய் ஷிர்சாட், லதாபாய் சோனவானே, பிரகாஷ் சுர்வே உள்ளிட்ட 15 பேருக்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை கிடைத்த தகவலை அடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்