பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு அயோத்தி செல்லும் ஏக்நாத் ஷிண்டே...!
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு அயோத்திக்கு செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு அயோத்திக்கு செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அவருக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
"ஏக்நாத் ஷிண்டே வருகிற 25-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து அயோத்திக்கு செல்வார் " என்றார். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் மாதம் சிவசேனாவில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர் கொடி தூக்கினார். அவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியதற்கு சில நாட்களுக்கு முன் தான் ஆதித்ய தாக்கரேவுடன் அயோத்தி சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல அவர் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழும் முன் கவுகாத்தியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் முகாமிட்டு இருந்தார். சமீபத்தில் அவர் ஆதரவு எம்.எல்.ஏ.களுடன் கவுகாத்தி சென்று அங்குள்ள காமக்யா தேவி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.