மராட்டிய மாநிலம்: கார்கள் மோதி விபத்து - 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
மேம்பாலத்தில் 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் பட்டூர் காட் பகுதி அருகே அகோலா-வாஷிம் நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் 2 பேர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அகோலா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.சி. கிரண் சர்நாயக்கின் உறவினர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.