திருமணமான 3 மாதத்தில் கள்ளக்காதலுடன் சேர்ந்து வழக்கறிஞர் கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி

கள்ளக்காதலுடன் சேர்ந்து வழக்கறிஞர் கணவரை கொலை செய்து மனைவி நாடகமாடியுள்ளார்.

Update: 2022-09-07 20:53 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் பட்னபூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கிரண் லோக்ஹண்டி. இவருக்கும் மனீஷா (வயது 21) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணமானது.

இந்த தம்பதி பட்னபூரில் உள்ள அம்பட் ரோடு பகுதியில் வசித்து வந்தனர். இதனிடையே, கடந்த 1-ம் தேதி கிரண் தனது வீட்டில் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். வீட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாகவும், அதை அணைக்க சென்ற தனது கணவர் கிரண் சென்றதாகவும் அப்போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு மனீஷா கூறினார்.

இதனை தொடர்ந்து விபத்து என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், கிரண் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் வழக்கறஞர் சங்கத்தினர் மாவட்ட கூடுதல் எஸ்.பி.யிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் கிரணை அவரது மனைவி கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

மனீஷாவுக்கும் அவரது ஊரை சேர்ந்த கணேஷ் மித்து அக்லவி (வயது 23) என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனீஷாவுக்கும் வழக்கறிஞர் கிரணுக்கும் இடையே திருமணம் நடந்த நிலையில் கணேஷ் தொடர்ந்து மனீஷாவுடன் தொடர்பில் இருந்துள்ளார். இது இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனால், கள்ளக்காதலுடன் சேர்ந்து வாழவேண்டும் என எண்ணிய மனீஷா தனது கணவர் கிரணை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த 1-ம் தேதி மனீஷா தனது கள்ளக்காதலன் கணேஷை வீட்டிற்கு வர வைத்துள்ளார். அங்கு வைத்து கூர்மையான ஆயுதத்தால் கிரணை மனீஷாவும் அவரது கள்ளக்காதல் கணேஷும் கொடூரமாக கொலை செய்துவிட்டு பின்னர் கியாஸ் சிலிண்டர் வெடித்தது போல் நாடகம் அரங்கேற்றியுள்ளனர்.

இதையடுத்து, வழக்கறிஞர் கணவர் கிரணை கள்ளக்காதலன் கணேஷுடன் சேர்ந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.      

Tags:    

மேலும் செய்திகள்