சிறுமி பாலியல் வன்கொடுமை; சிறுவன் உள்பட 6 பேர் கைது - அதிர்ச்சி சம்பவம்

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-08-16 07:42 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் கன்னட் தலுகாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அதேபகுதியை சேர்ந்த நபர் கடந்த வெள்ளிக்கிழழை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை வேறு சிலரும் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் 19 முதல் 33 வயது உடையவர்கள் எனவும், எஞ்சிய ஒருநபர் சிறுவன் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவன் அதேபகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.  

Tags:    

மேலும் செய்திகள்