சத்ரபதி சிவாஜியின் 350-வது முடிசூட்டு விழா கொண்டாட்டம் - முதல்-மந்திரி ஷிண்டே அறிவிப்பு

ஜூன் 1, 2-ந் தேதிகளில் சத்ரபதி சிவாஜியின் 350-வது முடிசூட்டு விழா கொண்டாட மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.;

Update:2023-04-30 05:40 IST

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி முடிசூடிய 350-வது ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 350-வது முடிசூட்டு விழா வருகிற ஜூன் 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ராய்காட்டில் கொண்டாடப்படும். இந்த முடிசூட்டு விழா மாநிலத்திற்கு ஒரு உத்வேகமாகும். சிவாஜி முடிசூட்டு விழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு முழுவதும் மாநிலத்தில் அனைத்து பகுதிகளில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் மராட்டிய அரசு சார்பில் ஆக்ராவில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்