மத்திய பிரதேசம்; பள்ளி முதல்வர் அறையில் மது பாட்டில், காண்டம்: அதிகாரிகள் அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தில் பிரபல ஆங்கில பள்ளி முதல்வர் அறையில் மது பாட்டில்கள் மற்றும் காண்டம் ஆகியவை சோதனையின்போது கிடைத்த அதிர்ச்சியில் அதிகாரிகள் உள்ளனர்.

Update: 2023-03-26 10:35 GMT



மொரீனா,


மத்திய பிரதேசத்தின் மொரீனா நகரில் பிரபல ஆங்கில பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நூலகம் அமைந்த பகுதிக்கு அடுத்து அறை ஒன்று உள்ளது. இதனை அந்த பள்ளியின் முதல்வர் பயன்படுத்தி வந்து உள்ளார்.

இந்த நிலையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிட்டியின் உறுப்பினர் ஒருவர் பள்ளிக்கு சோதனை நடத்த சென்று உள்ளார். அப்போது, பல திடுக்கிடும் விசயங்கள் தெரிய வந்தன.

அந்த பள்ளி முதல்வர் அறையில் இருந்து உயர்வகை மது பாட்டில்கள் மற்றும் காண்டம் உறைகள் ஆகியவை சோதனையின்போது கிடைத்து உள்ளன.

இதனை பார்த்து, சோதனையில் ஈடுபட்ட டாக்டர் நிவேதிதா சர்மா என்ற அந்த அதிகாரி அதிர்ச்சியடைந்து உள்ளார். இதேபோன்று, அந்த பள்ளியில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த, அதனை ஊக்குவிக்கும் வகையிலான புத்தகம் ஒன்றும் பள்ளி நூலகத்தில் இருந்து உள்ளது என அந்த அதிகாரி குறிப்பிட்டு உள்ளார்.

இதனால், அந்த மதம் சார்ந்த நடைமுறைகள் பள்ளியில் கடைப்பிடிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. இந்த சோதனையை தொடர்ந்து, அந்த பள்ளியை உடனடியாக முடக்கும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

வெளிநாட்டு மது பாட்டில்களை பதுக்கி வைத்ததற்காக முதல்வர் மீது கலால் துறை வழக்கு ஒன்றையும் பதிவு செய்து உள்ளது. இதனால், குழந்தைகள் படிக்க கூடிய பள்ளி கூடங்களில் இதுபோன்ற சூழ்நிலையில், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுவது சுட்டி காட்டப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்